சென்னை: இந்தியாவில் பண்டிகை காலத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை முதல் கட்டமாக குறைந்துள்ளது. இருப்பினும், போன்களின் விற்பனை விலை அதிகமாக உள்ளது.
இந்தியாவில் ஒரு வருடத்தில் ஸ்மார்ட்போன் விற்பனையில் 20 முதல் 25 சதவிகிதம் பண்டிகை கால விற்பனையாகும். இந்நிலையில், நடப்பு பண்டிகை காலத்தில் (செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 7 வரை) 13 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன.
இது கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைவு. அதே நேரத்தில், இந்த போன்களின் ஒட்டுமொத்த விலை கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 3.2 பில்லியன் டாலர்கள். கடந்த ஆண்டை விட ரூ.30,000-க்கு மேல் விலை கொண்ட பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதே சமயம் ரூ.45,000-க்கு மேல் விலை கொண்ட அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் விற்பனை கடந்த ஆண்டை விட 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
சந்தையில் அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரிப்பிற்கு ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் போன்களே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலக்கட்டத்தில் மொத்த விற்பனையில் 70 சதவீதம் ஆன்லைனில் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.