ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் 47 இடங்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி கூறினார்.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு, பருவ மழை முன்னெச்சரிக்கையாக பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்து அனைத்து துறை ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி, ராணிப்பேட்டையில் உள்ள 124 மண்டபத்தில் நிவாரண முகாம் அமைக்கப்படும்.
தற்போதுள்ள முகாம்களில் 8,000 பேர் தங்க முடியும். அனைத்து உபகரணங்களும் வாகனங்களும் வருவாய்த் துறையால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.