புதுடில்லி: ‘ஏர் பியூரிஃபையர்’ எனப்படும் காற்று சுத்திகரிப்பு தயாரிப்புகளின் விளம்பரங்கள் மற்றும் வாக்குறுதிகளின் நம்பகத்தன்மையை கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டில்லியில், மத்திய நுகர்வோர் விவகார செயலர் நிதி கரே கூறியதாவது: காற்று சுத்திகரிப்பு கருவிகள் குறித்து, உற்பத்தியாளர்கள் வெளியிடும் தகவல்களை, அரசு கண்காணிக்கும்.
இந்திய தர நிர்ணய நிறுவனமான பி.ஐ.எஸ்., இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. உற்பத்தியாளரின் தகவல் கருவியின் தரத்துடன் ஒத்துப்போகிறதா; பொய்யான வாக்குறுதியும் ஆராயப்படுகிறது. தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு இணங்காத பொருட்களின் விற்பனையை தடை செய்ய சான்றிதழ் அமைப்பின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
காற்று சுத்திகரிப்பு கருவி தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகள் குறித்து பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார். உலக தர நிர்ணய தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “காற்று சுத்திகரிப்பாளர்கள் பற்றி எழுத்து வடிவில் நிறைய கூறப்பட்டுள்ளது.
ஆனால், நிஜத்தில் இதில் எதுவும் இல்லை, உள்ளே ஒரு சாதாரண ரசிகரே” என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிஐஎஸ் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.