ஊட்டி: நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், ஊட்டி பழங்குடியினர் கலாச்சார மையத்தில், 3-வது நீலகிரி புத்தக திருவிழா – 2024 வரும் 18-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடக்கிறது.
பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார். சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் வாசிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். சென்னை புத்தகக் கண்காட்சியைப் போல, புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் வகையில், இலக்கிய சிந்தனையுள்ள தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி, இலக்கிய விழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இதனை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, ஊட்டிக்கு சுற்றுலா வந்தவர்களும், புத்தகங்கள் வாங்கிச் சென்றவர்களும் கண்டு ரசித்தனர்.
மேலும், தினசரி பட்டிமன்றம், சொற்பொழிவு, கவிதை அரங்கம், பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் எழுத்தாளர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டு பேசினர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் நூலகத் துறை சார்பில் 3வது நீலகிரி புத்தகத் திருவிழா 2024 ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் வரும் 18-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடக்கிறது.
இதற்காக புத்தக அரங்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் நடத்தப்படும் இவ்விழாவில் பொதுமக்கள், மாணவர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார் ஆட்சியர். நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-வது புத்தக திருவிழா வரும் 18-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஊட்டி பழங்குடியினர் கலாச்சார மையத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா நதியாது தெரிவித்துள்ளார்.
இந்தப் புத்தகத் திருவிழாவில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், அரசுத் துறைகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
புத்தகத் திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில், முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு, சாகித்ய அகாடமி விருது பெற்றவர் நிர்மாலயா, கலைமாமணி கு.ஞானசம்பந்தம், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பத்திரிகையாளர் கார்த்திகேயன், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ், கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர், பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத் துறை, கல்லூரி மாணவ, மாணவியர், இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழாவில் உணவகங்கள், குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.
எனவே, இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.