அருவி படம் மூலம் அறிமுகமான அதிதி பாலன், அதன் மூலம் பெரிதும் பிரபலம் ஆனவர். ஆனால் தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், அவர் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மற்ற மொழிகளில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில், தெலுங்கில் நானியின் “சூர்யா” படம் “சாட்டர்டே”வில் அக்கா ரோலில் நடித்துள்ளார்.
இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் படம் பற்றி தனது அனுபவத்தை பகிர்ந்த அதிதி பாலன், அந்த படத்தை பார்க்க சென்று, 30 நிமிடங்களில் தான் படம் பிடிக்காமல் தியேட்டரில் தூங்கிவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.