புதுடெல்லி: “அக்டோபர் 20-ம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய மேல் அடுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தால் மத்திய வங்கக்கடலில் அக்டோபர் 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
அதன் பிறகு, அது வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழையால் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் அடுத்தடுத்து உருவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, “வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
பலவீனமாக இருக்கும் வரை தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை. எனவே, இந்தோ-சீனாவில் இருந்து அடுத்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அந்தமான் கடலுக்குள் நுழையும் போது அது வலுப்பெறாமல் இருக்கும் தாழ்வான கிழக்கில் தமிழகத்தை நோக்கி, ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன், தமிழகத்தில் அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (வியாழக்கிழமை) காலை புதுச்சேரி-நெல்லூர் இடையே கரையை கடந்தது. இந்நிலையில், அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.