போர் முறைகள் பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களைப் பற்றியது மட்டுமல்ல. இப்போது, ட்ரோன்கள், சைபர் தாக்குதல்கள், இரசாயன ஆயுதங்கள், விண்வெளித் தாக்குதல்கள் என நவீனமாகிவிட்டன. இவற்றை சமாளிப்பது ராணுவத்துக்கு பெரும் சவாலாக உள்ளது.
எனவே, ராணுவத் துறையின் தேவைகளுக்கு தனியார் நிறுவனங்கள் பங்களிக்க வேண்டிய நேரம் இது. விரைவான மாற்றங்களை உள்வாங்குவது மட்டுமின்றி புதுமைகளை உருவாக்கவும் தனியார் துறை சிறந்த திறனைக் கொண்டுள்ளது.
பாதுகாப்புத் துறையின் திறனை மேலும் அதிகரிக்க இந்த மாற்றங்கள் அவசியம். இதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.