விஜயவாடா: ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ். சர்மிளா நேற்று விஜயவாடா பேருந்து நிலையத்தில் இருந்து தெனாலிக்கு அரசு பேருந்து டிக்கெட் எடுத்து சக பெண் பயணிகளுடன் பயணம் செய்தார்.
அப்போது ஒய்.எஸ்.சர்மிளா கூறியதாவது:- ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பதவியேற்று 5 மாதங்கள் ஆகிறது. ஆனால், தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அவரது சூப்பர் சிக்ஸ் தேர்தல் வாக்குறுதி என்ன? அந்த வாக்குறுதிகளை அவர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதிலும், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவச திட்டம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பேருந்தில் பயணச்சீட்டு வாங்கிப் பயணித்த பெண்கள் அனைவரும் டிக்கெட்டைக் காட்டி, “எப்போ நாயுடு சார் இலவசப் பேருந்துப் பயணம்” என்றார்கள். என்ற கோஷத்துடன் தெனாலி வரை பயணித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.