சென்னை: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களின் முதல் கூட்டம் அக்டோபர் 25-ம் தேதி நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநில ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2024-26-ம் கல்வியாண்டில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரங்கள் 90 சதவீதம் பள்ளி வாரியாக எமிஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 சதவீத பணிகள் தற்போது நடந்து வருகிறது.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட எஸ்எம்சி குழுக்களுக்கான முதல் கூட்டம் அக்டோபர் 25-ம் தேதி மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை பள்ளிகளில் நடைபெற உள்ளது. புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
அதேபோல், அந்த உறுப்பினர்களை சேர்க்க பள்ளி அளவில் வாட்ஸ்அப் குழுவை தலைமையாசிரியர் உருவாக்க வேண்டும். முதல் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயத்தை உறுப்பினர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். எஸ்எம்சி குழுக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கவும்.
புதிய உறுப்பினர்களுக்கு, தலைமைச் செயலர் தலைமையிலான மாநில கண்காணிப்பு குழு மற்றும் கலெக்டர் தலைமையிலான மாவட்ட கண்காணிப்பு குழு குறித்து தெரிவிக்க வேண்டும்.