பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் மற்றும் ஃபுட் கன்டெய்னர்களில் பயன்படுத்தப்படும் தொழில்துறை ரசாயனமான BPA (Bisphenol A), ஹார்மோன் சீர்குலைவு மற்றும் நீரிழிவு ஏற்படுவதற்கான அதிக அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் 2024 Scientific Sessions-களில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வு BPA-ஆனது இன்சுலின் சென்சிட்டிவிட்டியை குறைக்கிறது மற்றும் டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது என கூறியுள்ளது. அமலில் இருக்கும் தற்போதைய தரநிலைகள் காலாவதியானதாக இருப்பதால், பாதுகாப்பான BPA வெளிப்பாடு வரம்புகளை மறுபரிசீலனை செய்ய ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். Bisphenol A என்பதால் சுருக்கமே BPA ஆகும்.
இந்த கெமிக்கல் உணவு மற்றும் ட்ரிங்க் பேக்கேஜிங்கில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முந்தைய ஆய்வுகள் இந்த கெமிக்கல் மனித ஹார்மோன்களை சீர்குலைக்கும் தன்மையை வெளிப்படுத்திய நிலையில், சமீபத்திய புதிய ஆய்வானது BPA-ஆனது இன்சுலின் சென்சிட்டிவிட்டியை குறைப்பதற்கான நேரடி ஆதாரங்களை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் என்பது நாள்பட்ட உயர் ரத்த சர்க்கரை நிலைக்கு வழிவகுக்கும், இது டைப் 2 நீரிழிவு நோய்க்கான முக்கிய ஆபத்து காரணியாக குறிப்பிடப்படுகிறது.
ஆய்வின் மூத்த எழுத்தாளரும், கலிபோர்னியா பாலிடெக்னிக் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் பேராசிரியருமான டோட் ஹகோபியன் தனது செய்திக்குறிப்பு ஒன்றில் ’ சமீபத்திய இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்க EPA-ஆனது பாதுகாப்பான டோஸை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், சுகாதார வழங்குநர்கள் இந்த மாற்றங்களை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கலாம் என்றும் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது ஃபுட் கன்டெய்னர்களில் ஒரு நாளைக்கு ஒரு கிலோ பாடி வெயிட்டில் 5mg வரையிலான BPA அளவை பாதுகாப்பானதாக FDA கருதுகிறது. ஆனால் புதிய ஆய்வின் மூலம் இது அபாயகரமானதாக கண்டறியப்பட்ட அளவை விட 100 மடங்கு அதிகம் என தெரிய வந்துள்ளது.
இந்த சூழலில் 2024-ஆம் ஆண்டின் இறுதிக்குள் உணவு அல்லது பானங்களை பேக் செய்ய பயன்படுத்தும் பொருட்களில் BPA மீதான தடையை பரிந்துரைக்க சில முக்கிய ஆராய்ச்சியாளர்களை தூண்டுகிறது. BPA லெவல் மீது எழுந்திருக்கும் கவலையானது நாம் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களில் இருக்க கூடிய தீங்கு விளைவிக்கும் பொருட்களை பற்றிய எச்சரிக்கையின் ஒரு பகுதியாகும்.இத்தகைய பொருட்கள் ஏற்படுத்தும் நீண்டகால உடல்நல பாதிப்புகளை பற்றி புரிந்துகொள்வது, டைப் 2 நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய் அபாயங்களைக் குறைக்க ஏதுவாக சிறந்த பொருட்களை தேர்வு செய்ய வழிகாட்டும்.
குறிப்பாக அமெரிக்காவில் பல மரணத்திற்கு நீரிழிவு ஒரு முக்கிய காரணமாக இருப்பதால், இந்த நிலைக்கு பங்களிக்கும் சிறிய காரணிகளை கூட சரியாக புரிந்து கொள்வது முக்கியம் என டோட் ஹகோபியன் குறிப்பிட்டு உள்ளார். இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு அபாயத்துடன் தொடர்புடைய பாதுகாப்பான BPA வெளிப்பாடு அளவை மறுமதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பிபிஏ வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் முக்கிய பங்கை இந்த ஆய்வு எடுத்து காட்டுகிறது எனவும் டோட் ஹகோபியன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்தக் கட்டுரையின் முந்தைய பதிப்பு பாதுகாப்பான BPA வெளிப்பாடாக EPA கருதும் அளவிற்கும், ஆய்வில் ஆபத்தானது எனக் கருதுவதற்கும் உள்ள வித்தியாசத்தை தவறாக குறிப்பிட்டது.சரியான வேறுபாடு 1000 அல்ல, 100 மடங்கு அதிகம். அதே நேரம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிபிஏ இல்லாத கேன்களைப் பயன்படுத்துவது போன்ற செயல்கள் பிபிஏ வெளிப்பாட்டை குறைத்து இதன் மூலம் நீரிழிவு அபாயம் குறைக்கும் என்ற கண்டுபிடிப்புகளால் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்பட்டனர். மேலும் தனிநபர்கள் சாத்தியமான உடல்நல அபாயங்களைக் குறைக்க மாற்று தயாரிப்புகளை பயன்படுத்துவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வு நமக்கு உணர்த்துகிறது.