திருவள்ளூர்: கடந்த 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த 213 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் விளைவாக, அவர்களின் வீரத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி நாடு முழுவதும் மாவீரர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல்துறை எஸ்பி ரா.சீனிவாசப் பெருமாள் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கூடுதல் எஸ்பி ஹரிகுமார், டிஎஸ்பிக்கள் லோகநாதன், கந்தன், தமிழரசி, சாந்திசேகர், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் காவலர்கள், ஓய்வு பெற்ற காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து 63 குண்டுகள் வானை நோக்கி வீசப்பட்டன. வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்பதாக உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் கலந்து கொண்டனர்.