விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘எல்.ஐ.கே’. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை லலித் குமார் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தீமா’ பாடல் வெளியானது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில் ‘எல்ஐகே’ படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
படம் குறிப்பிட்ட பட்ஜெட்டை தாண்டியுள்ளது. இதனால் விக்னேஷ் சிவன், லலித்குமார் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நயன்தாராவே நடிக்கவிருக்கும் படத்தின் செலவை ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்னும் நிலுவையில் உள்ளது.
அதனால் நடிகர்களின் தேதிகளும் வீணாகிறது. மேலும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால், விரைவில் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.