ஓய்வு பெற்ற வார்னர், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. முதல் டெஸ்ட் வரும் நவ., 22ல் பெர்த்தில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிசம்பர் 6-10), பிரிஸ்பேன் (டிசம்பர் 14-18), மெல்போர்ன் (டிசம்பர் 26-30) மற்றும் சிட்னி (2025, ஜனவரி 3-7) ஆகிய இடங்களில் நடைபெறும்.
இதுகுறித்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் (37) கூறியதாவது. ஒரு தொலைபேசி அழைப்பு மட்டுமே தேவை, நான் எப்போதும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாட தயாராக இருக்கிறேன். உண்மையில், கடந்த பிப்ரவரி முதல், ஆஸ்திரேலியர்கள் இதுவரை ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளனர். எனவே உங்களைப் போலவே நானும் தயாராகி வருகிறேன்.
ஒருவேளை எனது பங்களிப்பு அணிக்கு தேவைப்பட்டால், அடுத்த ஷெஃபீல்டு (முதல் வகுப்பு) போட்டியில் மகிழ்ச்சியுடன் விளையாடுவேன். சரியான காரணங்களுக்காக ஓய்வு பெற்றேன். இப்போது நான் சிறப்பாக ‘முடிக்க’ விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.