சூர்யா நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவான ‘கங்குவா’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பிறகு சூர்யாவின் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவரது ரசிகர்கள் ‘கங்குவா’வை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த படத்தின் வெளியீட்டு தேதி முதலில் அக்டோபர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் ரஜினியின் ‘வேட்டையன்’ படம் அதே நாளில் வெளியாக இருப்பதால், ‘கங்குவா’ நவம்பர் 14க்கு தள்ளப்பட்டது.
தற்போது, படம் வெளியாவதற்கான ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெறுகிறது. சூர்யா மற்றும் படக்குழு இந்தியா முழுவதும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர். தற்போது டெல்லியில் ‘கங்குவா’ படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது.
‘கங்குவா’ தமிழ் சினிமாவில் உருவாகும் முதல் பான் இந்திய படம் என்பதால், அதன் ப்ரோமோஷன் மிகவும் கவனமாக நடைபெறுகிறது. இப்படம் ரசிகர்களிடத்தில் வெற்றியடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலிவுட்டில் ‘கங்குவா’க்கு நேர்மறையான விமர்சனங்கள் வருகின்றன. பாடலாசிரியர் மதன் கார்க்கி இப்படத்தை பார்த்து அசந்துபோனதாக தெரிவித்துள்ளார். 100 முறை மேல் பார்த்து, ஒவ்வொரு முறையும் பிரம்மிப்பை உணர்ந்துள்ளார்.
பிரம்மாண்ட காட்சி அமைப்புகள், சூர்யாவின் நடிப்பு, மற்றும் சிவாவின் இயக்கம் ஆகியவை அனைத்தும் பாராட்டுக்குரியவை என மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். இதனை வைத்து பார்த்தால், ‘கங்குவா’ தமிழ் சினிமாவின் பெருமையை அதிகரிக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.