பெங்களூரு: போக்குவரத்து துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகை வார இறுதியில் வருகிறது. கன்னட ராஜ்யோத்சவா வருவதையொட்டி தொடர் விடுமுறை கிடைத்தது. இதை சாதகமாக பயன்படுத்தி தனியார் பஸ் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக போக்குவரத்து துறைக்கு புகார்கள் வந்தன.
தீபாவளியன்று கூடுதல் கட்டணம் வசூலித்தால் தனியார் பேருந்து நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எக்காரணம் கொண்டும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்போம்.
பொது போக்குவரத்து வாகனங்களில் வெடிபொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதை மீறக்கூடாது. கூடுதல் கட்டணம் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், 94498 63429, 94498 63426 என்ற மொபைல் எண்களில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளவும்.