கடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக வனப்பகுதிகளில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மகிரி பகுதியில் உள்ள வனப்பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெரிய பாறைகள் நிறைந்த ஆற்றை கடக்க நின்ற நிலையில் மூன்று யானைகள் ஒவ்வொன்றாக ஆற்றை கடக்க முயன்றன. அப்போது எதிரே வந்த பெண் யானை ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 300 மீட்டர் தூரம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சிறிது தூரத்தில் பாறைகள் இருந்த நிலையில், வெள்ளத்தில் இருந்து தப்பிக்க அதனைப் பயன்படுத்திய பெண் யானை, தடுமாறி கரை ஒதுங்கியது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் யானை இரண்டு நாட்களாக அப்பகுதியில் யானைகள் சுற்றித்திரிந்த நிலையில் நேற்று அப்பகுதிக்கு சென்ற இளைஞர்கள் சிலர் எடுத்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யானை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை உறுதி செய்ததையடுத்து, தற்போது வனத்துறையினர் அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.