திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலின் உண்டியல் வருமானத்தை பக்தர்கள் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி அக்டோபர் 24, 25 ஆகிய தேதிகளில் கோயில் வசந்த மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
உண்டியல் எண்ணும் பணிக்கு கோயில் தக்கார் அருள்முருகன் தலைமை வகித்தார். இணை கமிஷனர் ஞானசேகரன் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் தங்கம், நாகவேல், கண்காணிப்பாளர் செந்தில்வேல்முருகன், ஆய்வாளர் செந்தில்நாயக், தக்கார் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் மோகன், கருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிவகாசி பதின் சித்தர் மட பீடம் குருகுல வேத பள்ளி உழவர் குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கல ஆஞ்சநேயர் உழவர் குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 3 கோடியே 62 லட்சத்து 18 ஆயிரத்து 791 ரூபாயும், தங்கம் 1 கிலோ 55 கிராம், வெள்ளி 20 கிலோ 336 கிராம், பித்தளை 31 கிலோ 746 கிராம், தாமிரம் 3 கிலோ 12 கிராம், தகரம் 7 கிலோ 546 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 675 மில்லியன் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.