புதுடெல்லி: அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் நடைபெற்ற 31-வது ஆண்டு சிறந்த வங்கி விருது வழங்கும் விழாவில் SBI வங்கிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
எஸ்பிஐ சேர்மன் சிஎஸ் செட்டி விருதை பெற்றார். வங்கியின் கூற்றுப்படி, இந்த விருது நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளம்.
வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதிலும் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதிலும் வங்கியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது. பல ஆண்டுகளாக குளோபல் ஃபைனான்ஸ் வழங்கும் சிறந்த வங்கி விருதுகள் உலகளாவிய நிதி நிறுவனங்களை மதிப்பிடுவதற்கான நம்பகமான அளவுகோலாகும்.