சென்னை: தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளான கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென்னிந்திய கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.