பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் பிளாட்டூன், க்ரை-பேபி, டெட் மேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் திரைப்படத் தொடரில் ஜாக் ஸ்பாரோவாக நடித்ததன் மூலம் அவர் உலகம் முழுவதும் பிரபலமானார். சில படங்களை தயாரித்து, ‘தி பிரேவ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘மோடி, த்ரீ டேஸ் ஆன் த விங்க் ஆக்ப் மேட்னஸ்‘ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இதில் ரெக்கார்டோ ஸ்கேமர்சியோ, ஸ்டீபன் கிராஹாம், அல் பசினோ மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இத்தாலியில் நடந்த ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. விழாவில் ஜானி டெப்பிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
‘மோடி, த்ரீ டேஸ் ஆன் த விங் ஆஃப் மேட்னஸ்’ இத்தாலிய நவீன ஓவியரும் சிற்பியுமான மோடிகிலியானியின் வாழ்க்கை வரலாறு ஆகும். அவர் பிரான்சில் பணிபுரிந்த நவீன ஓவியர். இது குறித்து பேசிய ஜானி டெப், “நடிகர் அல் பசினோ 1997-ல் மோடிக்லியானி பற்றி கூறினார். அந்த கேரக்டரில் என்னை நடிக்க சொன்னார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதைப் பற்றி மீண்டும் பேசிய அல் பசினோ, ‘மோடிக்லியானி கதையை நீங்கள் இயக்க வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்றார். அதனால்தான் மீண்டும் இயக்குநரானேன்.