சென்னை: அழகான முகத்தில் திருஷ்டி போல் வெயிலில் ஏற்படும் கருமை இருக்கும். முகத்தின் கருமை நீங்கி தங்கத்தை போன்ற ஜொலிக்கும் சருமம் வேண்டுமா! அதையும் வீட்டில் இருந்தபடியே பெற்றிடலாம்.
வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே உங்கள் அழகை மேலும் அழகாக்கி கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்: எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், தேன் – அரை டீஸ்பூன். இது அத்தனையும் உங்க வீட்டு சமையலறை பொருட்கள்தான். இதுதான் உங்களை அழகாக்குகிறது.
செய்முறை: ஒரு சுத்தமான பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது ஸ்க்ரப் தயார். அதனை கைகளை உபயோகித்து முகத்தில் தடவி லேசாக தேய்க்க வேண்டும். அதன் பின்னர், முகத்தை தண்ணீர் மற்றும் பஞ்சு உபயோகித்து துடைத்திடவும்.
இப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால், முகம் சும்மா பிரகாசமாக ஜொலிக்கும். மிருதுவாகவும் மாறிவிடும். ஒரு முறை செய்வதன் மூலம் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்.