பெங்களூரு: பெங்களூருவில் வசிப்பவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் வகையில் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, ‘பாரத்’ திட்டத்தின் கீழ், ஒரு கிலோ அரிசியை, 34 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.
இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பெங்களூரு வாசிகளுக்கு தீபாவளி பரிசாக குறைந்த விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் திட்டம் பெங்களூரு நந்தினி லே-அவுட்டில் உள்ள வீர ராணி கிட்டூர் சென்னம்மா மைதானத்தில் இன்று தொடங்கப்படுகிறது.
இதில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர்கள் ஜெயந்தி பாய் பம்பானியா, பி.எல்.வர்மா, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் இயக்குநர் சிவலிங்கப்பா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.30; நிலக்கடலை கிலோ 70 ரூபாய்; ஒரு கிலோ பருப்பு ரூ.107க்கு விற்கப்படுகிறது.அரிசி விலையில் மாற்றம் இல்லை.