டெல்லி: அண்டை நாடான சீனாவின் ராணுவம் 2020 மே மாதம் கிழக்கு லடாக் பகுதியில் நுழைய முயன்றது. இதன் காரணமாக இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர். இதன் காரணமாக இரு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, எல்லையில் இருந்து படைகளை இறக்கும் பணிகள் துவங்கின.
தற்போது ஆபரேஷன் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லையில் உள்ள தற்காலிக மற்றும் நிரந்தர கட்டமைப்புகள் அகற்றப்பட்ட போது இரு நாட்டு ராணுவங்களும் ஆய்வு செய்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு பின்னர் 2020 மே மாதத்திற்கு முன்னர் இருந்தவாறு இராணுவம் மீண்டும் எல்லை ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.