சென்னை: தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகப் பணியாளர்கள் சாகுபடியில் ஈடுபடுபவர்கள் 10% போனஸ் மட்டுமே பெறத் தகுதியுடையவர்கள்.
சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு ரப்பர் கழகம் மற்றும் தமிழ்நாடு வனவியல் கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படுகிறது.
வனத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான 20% போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு ரூ. 5.72 கோடிக்கு 20% போனஸ் கிடைக்கும். இதன் மூலம் 3939 பணியாளர்கள் பயனடைவார்கள் என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.