கடந்த 10 ஆண்டுகளில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை, ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என, வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
2013-14ல், 44,078 பேர், 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளனர், ஆனால், 2023-24ல், இந்த எண்ணிக்கை, 2,30,000 ஆக அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, 2013-14ல் 2 ஆக இருந்த ரூ.100-500 கோடி வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது 262 ஆக உயர்ந்துள்ளது.
500 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை கூட 2013-14ல் 1 ஆக இருந்தது 2023-24ல் 23 ஆக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முன்னணி குறிகாட்டியாக விளங்கும் வருமான வரி தாக்கல் செய்யும் பொதுமக்களின் வருமானத்தில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.