சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ‘அமரன்’ திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த படம், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று இரவு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பிறகு, அவர் மிகுந்த உணர்வில் இருந்ததாகக் கூறப்படுகிறது. “கிளைமாக்ஸ் ரொம்ப நெகிழ்வாக இருந்தது. கண் கலங்கிவிட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினின் ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் திருமிகு இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களை தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் ‘அமரன்’ படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும், நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
‘அமரன்’ திரைப்படம், கதை, நடிப்பு மற்றும் உணர்வுப் படுத்திய தரவால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, முக்கியமான சமூக மெய்யியல் கதையை எடுத்துரைக்கின்றது.