சென்னை: கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. தொடக்கத்தில் சவரன் ஒன்றுக்கு ரூ.56 ஆயிரத்துக்கு மேல் இருந்த தங்கத்தின் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்கி பின்னர் குறைந்தது. இதையடுத்து, அக்டோபர் இறுதியில் ஒரு கிராம் தங்கம் ரூ.59,640 ஆகவும், ஒரு கிராம் ரூ.7,455 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நவம்பர் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை ரூ.10 குறைந்துள்ளது. சவரன் ஒன்றுக்கு 560 ரூபாய் குறைந்து 7,385 விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையை பொறுத்த வரையில் கடந்த 23-ம் தேதி உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், அதன்பிறகு வெள்ளி விலை குறைந்துள்ளது. அதன் பிறகு விலை ஏறி இறங்கியது. இந்நிலையில் இன்று ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.106 ஆகவும், பார் வெள்ளி கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.