புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் ஆகியோர் தங்கள் நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையை மேம்படுத்தும் நோக்கில் தொலைபேசியில் உரையாடினர். இந்நிலையில், கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடனான ஆக்கப்பூர்வமான தொலைபேசி உரையாடலின் எக்ஸ்-பதிவை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இந்தியா-கிரீஸ் கூட்டாண்மையை வலுப்படுத்த எங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம். வர்த்தகம், பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து மற்றும் இணைப்பில் ஒத்துழைப்பை ஆழமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
ஐரோப்பிய யூனியனில் கிரீஸ் இந்தியாவின் மதிப்புமிக்க நண்பன் என்று கூறினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் கிரீஸ் பிரதமர் மிட்சோடாகிஸ் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். அப்போது திட்டமிடப்பட்ட பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த உரையாடலின் போது, மத்திய தரைக்கடல் பொருளாதார ஒத்துழைப்பு (IMEEC) மற்றும் மேற்கு ஆசியாவின் முன்னேற்றங்கள் உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.