வெந்தயம் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல சரும பிரச்சனைகளையும் தீர்க்கும். வெந்தயம் எளிதில் கிடைக்கும் இது ஒரு பல்துறை பொருள் என்பதால், அதைக் கொண்டு உங்கள் சருமத்தை எளிதாகப் பராமரிக்கலாம். வெந்தயம் சிறந்த சுத்தப்படுத்தியாகவும் செயல்படுகிறது.
வெந்தயத்தை தினமும் பாலுடன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தால், துளைகளில் உள்ள அடைப்புகள் அனைத்தும் நீங்கி, சருமம் சுத்தமாகும். இதை தினமும் செய்யலாம்.
வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, பாலுடன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரம் இருமுறை செய்யலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்ற பின் இந்த ஃபேஸ் பேக்கை அணிந்தால் சருமம் கருமையாவதை தடுக்கலாம்.
வெந்தயப் பொடியை தயிருடன் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் மூச்சுத் திணறல் உள்ளவர்கள் வாரம் இருமுறை தடவுவது நல்லது.
வெந்தயப் பொடியை தேனுடன் கலந்து முகத்தில் தடவி பின் கழுவவும். பருக்கள் வராமல் தடுக்கிறது. வெயிலின் தாக்கத்தால் சருமத்தின் நிறம் கருமையாக மாறியிருந்தால், வெந்தயத்தைக் கொண்டு எளிதாக நீக்கலாம். 1/2 கப் வெந்தயத்தை தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும், தண்ணீரை ஆறவைத்து, தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உங்கள் முகத்தில் பயன்படுத்தவும். இதனை கை, கால்களில் தடவி மறுநாள் காலையில் கழுவவும்.