காசா: காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் போர் ஓர் ஆண்டைக் கடந்துள்ளது. இந்தப் போரில் இதுவரை சுமார் 43,000 பேர் பலியாகினர். மனிதாபிமான அடிப்படையில் காசாவில் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.
ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிக்கும்வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறி வரும் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையே, கடந்த சில வாரமாக வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், வடக்கு காசாவில் பெய்ட் லாஹியா நகரில் உள்ள ஒரு வீடு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 8 பெண்கள், 6 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.