இந்திய ரயில்வே இப்போது முக்கிய ரயில் நிலையங்களில் QR குறியீடு மூலம் ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதி மூலம், பயணிகள் டிக்கெட் கவுன்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கலாம்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், பல ரயில் நிலையங்களில் QR குறியீடு மூலம் டிக்கெட் முன்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதன்முறையாக, வடகிழக்கு எல்லை ரயில்வே அதன் ஐந்து பிரிவுகளில் 588 QR லைன் முன்பதிவு கவுன்டர்களை நிறுவியுள்ளது. இந்த முன்பதிவு கவுன்டர்கள் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தின் 7 மாவட்டங்கள் மற்றும் வடக்கு பீகாரின் 5 மாவட்டங்களில் அமைந்துள்ளன.
இதனால், 588 டிஜிட்டல் முன்பதிவு கவுன்டர்கள் மூலம், பயணிகள் மிக எளிதாக தங்களின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, கூட்ட நெரிசலின்றி பண்டிகை காலங்களில் கூட டிக்கெட்டுகளைப் பெறலாம். இத்திட்டத்தின் மூலம் பயணிகள் மிக எளிதான முறையில் டிக்கெட் பெற முடியும்.
இந்த QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியது குறித்து, ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கபிஞ்சல் கிஷோர் சர்மா கூறுகையில், “இந்த முயற்சியானது வடகிழக்கு எல்லை ரயில்வே நெட்வொர்க்கில் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் தொந்தரவு இல்லாத டிஜிட்டல் கட்டண டிக்கெட்டை உறுதி செய்கிறது” என்றார்.
இதன் மூலம், முன்பு இருந்த கவுன்டர்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கலாம். இந்த க்யூஆர் குறியீடு அமைப்பு மூலம், ரயில் நிலையங்களில் அதிக போக்குவரத்து மற்றும் நெரிசலைக் குறைக்கவும், பயணிகளுக்கு வசதியான சேவையை வழங்கவும் இந்த புதிய முறையை ரயில்வே கொண்டு வந்துள்ளது.
இந்த தீர்வின் மூலம் பயணிகள் எளிதாக டிக்கெட்டுகளை வாங்கவும், ரயில்வேயின் சேவை தரத்தை மேம்படுத்தவும், பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை விரைவாக பதிவு செய்து பயணத்தை தொடங்கவும் உதவுகிறது.