தஞ்சாவூர்: சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் மீன் மொத்த வியாபாரத்தை தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியிலே இடமாற்றம் செய்யக்கூடாது என்று மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூ., மாநகர செயலாளர் ஆர் .பி.முத்துக்குமரன் தலைமை வகித்தார். மாநகர நிர்வாகிகள் எஸ்.சோமசுந்தரம், டி.எஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சிக்கு ஒதுக்குப்புறமான, போக்குவரத்து நெருக்கடி இல்லாத இடத்தில் மீன் மொத்த வியாபாரத்தை இடமாற்றம் செய்ய வேண்டும், கொடிமரத்து மூலை, கீழ அலங்கம் பகுதியில் மீன் மார்க்கெட்டை கொண்டு வரக்கூடாது.
சேதமடைந்த சாலைகளை உடன் செப்பனிட வேண்டும், தரக்குறைவான சாலைகளை அமைக்கும் ஒப்பந்தக்காரர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போது மழைக்காலம் என்பதால் மழை நீர் கால்வாய்களை தூர் வார வேண்டும், மழை நீர் கால்வாய் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, மாநகர நிர்வாகிகள் கல்யாணி, பிரபாகரன், செந்தில் நாதன், செல்வகுமார், செல்வராஜ், சுசீலா, ராஜலட்சுமி ,ஆறுமுகம், கருணாநிதி, கைலாசம், மாரிமுத்து, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் மற்றும் பலர் கலந்து ொண்டனர். மாநகர நிர்வாகி தேவி நன்றி கூறினார்.