சென்னை: சூரசம்ஹாரம் மற்றும் இன்று முகூர்த்த நாள் என்பதால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000-க்கும், ஐஸ் மல்லி ரூ.900-க்கும், ஜாதி மல்லி, முல்லை ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.1,500-க்கும், அரளி பூ ரூ.230-க்கும் விற்பனையானது.
சாமந்தி பூ ரூ.120-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், பன்னீர் ரோஜா ரூ.120-க்கும், சாக்லேட் ரோஜா ரூ.140-க்கும் விற்பனையானது. இது குறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ் கூறியதாவது:-
சூரசம்ஹாரம் மற்றும் முகூர்த்த நாட்களையொட்டி நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் இருமடங்காக உயர்ந்துள்ளது. இருப்பினும், பூக்களை வாங்க சில்லரை வியாபாரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விற்பனை சரிவடைந்துள்ளது என்றார்.