By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நேர்காணலை பாதியில் நிறுத்திய டிரம்ப்… என்.பி.சி. தொகுப்பாளருடன் கடும் வாக்குவாதம்!
    1 Min Read
    ஹோர்முஸ் ஜலசந்தி அருகே 4 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: அமெரிக்கா தகவல்
    1 Min Read
    இம்ரான்கான் தம்பதியை நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சர்ச்சை
    1 Min Read
    ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய முடியவில்லை: ஐ.நா. முகமை
    1 Min Read
    மோடி என் நல்ல நண்பர்; இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் – டிரம்ப்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
    நடிகர் சலீம் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்… “மறக்க முடியாத கலைஞர்” என புகழாரம்!
    1 Min Read
    அமெரிக்காவில் தெலுங்கானா இளைஞர் சுட்டுக்கொலை… உடலை இந்தியா கொண்டு வர குடும்பம் கோரிக்கை!
    1 Min Read
    கடும் வெயில் எதிரொலி… தெலுங்கானாவில் பள்ளிகள் திறப்பு ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு!
    1 Min Read
    திருமணத்திற்குப் பிறகு கணவரிடம் உண்மையை கூறிய இளம்பெண்… 6 ஆண்டுகள் பழைய பாலியல் வழக்கில் நடவடிக்கை!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “காவல் நிலையங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்”… சென்னை கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!
    1 Min Read
    ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்?… பெண்கள் பாதுகாப்புக்கான புதிய திட்டம்!
    1 Min Read
    போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை… ‘மேக்ஸ்’ மோப்பநாய் களமிறங்கியது!
    1 Min Read
    ESIC மருத்துவ இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஜூன் 21 கடைசி நாள்
    1 Min Read
    தமிழகத்தில் வெயில் சதமடிப்பு: மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் பதிவு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
தமிழகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

Nagaraj
Last updated: April 24, 2026 5:07 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு பணிகள் மேற்ெள்ளப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், பெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 46 ஆயிரத்து 242 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 771 பெண் வாக்காளர்களும், 42 மூன்றாம் பாலினத்தவரும் என 3 லட்சத்து 1,055 வாக்காளர்கள் உள்ளனர். இதுபோல் பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 564 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 91,123 பெண் வாக்காளர்களும், 63 மூன்றாம் பாலினத்தவரும் என 3 லட்சத்து 81 ஆயிரத்து 750 வாக்காளர்கள் உள்ளனர்.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 559 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 556 பெண் வாக்காளர்களும், 62 மூன்றாம் பாலினத்தவரும் என 2 லட்சத்து 46 ஆயிரத்து 177 வாக்காளர்கள் உள்ளனர். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 909 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 829 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தவரும் என 2 லட்சத்து 78 ஆயிரத்து 775 வாக்காளர்கள் என மாவட்டம் முழுவதும் 5 லட்சத்து 85 ஆயிரத்து 274 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 22 ஆயிரத்து 279 பெண் வாக்காளர்களும், 204 மூன்றாம் பாலினத்தவரும் என 12 லட்சத்து 7 ஆயிரத்து 757 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10,54,274 வாக்களித்துள்ளனர்.

ஆலந்தூர் தொகுதியில் 431 வாக்குச்சாவடிகளும், பெரும்புதூர் தொகுதியில் 446 வாக்குச்சாவடிகளும், உத்திரமேரூர் தொகுதியில் 321 வாக்குச்சாவடிகளும், காஞ்சிபுரம் தொகுதியில் 348 வாக்குச்சாவடிகளும் என 1556 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆலந்தூர் தொகுதியில் 431 வாக்குச்சாவடிகளில் 517 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 517 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 560 வாக்குப்பதிவு சீட்டு சரிபார்ப்பு கருவிகளும் என 1594 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. பெரும்புதூர் தொகுதியில் 446 வாக்குச்சாவடிகளில் 530 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 530 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 574 வாக்குப்பதிவு சீட்டு சரிபார்ப்பு கருவிகளும் என 1634 இயந்திரங்களும், உத்திரமேரூர் தொகுதியில் 321 வாக்குச்சாவடிகளில் 385 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 385 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 417 வாக்குப்பதிவு சீட்டு சரிபார்ப்பு கருவிகளும் என 1187 இயந்திரங்களும், காஞ்சிபுரம் தொகுதியில் 358 வாக்குச்சாவடிகளில் 429 வாக்குப்பதிவு இயந்தி ரங்களும், 429 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 465 வாக்குப்பதிவு சீட்டு சரிபார்ப்பு கருவிகளும் என 1323 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படை 216 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் 80 பேரும், ஓய்வுபெற்ற ராணுவ மற்றும் போலீசார் 456 பேரும், சட்டம்ஒழுங்கு போலீசார் 784 பேர் உட்பட 1536, போலீசார் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தலைமையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 84.92 சதவிகிதம் ஓட்டு பதிவாகியுள்ளது. ஆலந்தூர், பெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் இருந்து நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 3 மணி வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு காஞ்சிபுரம் பொன்னிக்கரையில் உள்ள அண்ணா உறுப்பு பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சினேகா தலைமையில் தேர்தல் பார்வையாளர்கள், மண்டல அலுவலர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார், மத்திய பாதுகாப்பு ரிசர்வ் படை வீரர்கள் முன்னிலையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல்வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சுழற்சி முறையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாரிகள், போலீசார், பிஆர்பிஎப் வீரர்கள் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

You Might Also Like

“காவல் நிலையங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்”… சென்னை கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்?… பெண்கள் பாதுகாப்புக்கான புதிய திட்டம்!

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை… ‘மேக்ஸ்’ மோப்பநாய் களமிறங்கியது!

ESIC மருத்துவ இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஜூன் 21 கடைசி நாள்

தமிழகத்தில் வெயில் சதமடிப்பு: மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் பதிவு

TAGGED:3 layers3 அடுக்குofficerspolicesecurity workஅதிகாரிகள்காஞ்சிபுரம்பாதுகாப்பு பணிபூட்டி சீல் வைப்புோலீசார்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

“உதயநிதி தலைமையில் திமுக பெரும் தோல்வி சந்திக்கும்”… மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?