சென்னை: பிரதீப் ரங்கநாதன் இயக்கும் ‘டிராகன்’ படத்தில் பிரபல யூடியூப் கலைஞர்களான வி.ஜே.சித்து, அர்ஷத்கான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டிராகன்’.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு வெளியாகும் இப்படத்தில் பிரபல யூடியூபர்களான விஜே சித்து மற்றும் அர்ஷத் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில், “அன்புள்ள சித்து மற்றும் அர்ஷத், நீங்கள் இருவரும் உங்கள் யூடியூப் சேனல் மூலம் மக்களை தங்கள் கவலைகளை மறந்து சிரிக்க வைக்கிறீர்கள். படப்பிடிப்பின் போது ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்கு முன் உங்கள் வீடியோவைப் பார்ப்பதை நாங்கள் பார்த்தோம். இப்போது உலகம் உங்களை பெரிய திரையில் ஒரு நடிகராக, முக்கிய வேடங்களில் பார்க்கும் நேரம் வந்துவிட்டது.
‘டிராகன்’ படத்தில் பிரதீப்புடன் உங்கள் அற்புதமான நடிப்பை உலகுக்கு காட்ட ஆவலுடன் காத்திருக்கிறேன். இவர்கள் இருவருக்கும் யூடியூப்பில் பெரும் ரசிகர்கள் உள்ளனர். முன்னதாக, விஜே சித்து, ‘பிளாக் ஷீப்’ சேனலில் ‘ஃபன் பண்றோம்’ என்ற வெளிப்படையான நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார்.
அதன் பிறகு வி.ஜே.சித்து சொந்தமாக சேனல் தொடங்கி பிரபலங்களை வைத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவருக்கும் அர்ஷத் கானுக்கும் அவர்களின் வி–லாக் வீடியோக்களுக்கு ரசிகர்கள் அதிகம். இவரது சேனலை 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.