புதுடில்லி: எரிபொருள் விலை உயர்வால் சர்வதேச விமான டிக்கெட் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்ற போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே தொடர்ந்து வருகிறது.
உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் இருப்பதால் உலகளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான எரிபொருள் விலை அதிகமாகி இருப்பதால் விமான நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.
இந்தநிலையில், சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலையை 5 சதவீதம் உயர்த்தியது மத்திய அரசு. எரிபொருள் விலை உயர்வால் சர்வதேச விமான டிக்கெட் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் விமான நிறுவனங்கள் விமான எரிபொருள் உயர்வு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
பாகிஸ்தான் வான்வெளி மூடல் காரணமாக ஐரோப்பா, வட அமெரிக்கா செல்லும் விமானங்கள் சுற்று பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது எரிபொருள் செலவை மேலும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.