சேற்றுப் புண், தொண்டைப்புண், ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகளை வீட்டு வைத்தியம் மூலம் எப்படி எளிதாக சரிசெய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள் பொடியை தேனுடன் கலந்து கால் நகங்களில் பூசி வர சேற்று புண்கள் குணமாகும். நாவல்பழத்தை உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடலாம். சித்தரை அரைத்து அரைத்து தேனுடன் சாப்பிட்டு வர தொண்டை கரகரப்பு நீங்கும்.
ஒற்றைத்தலைவலிக்கு பூண்டை அரைத்து பற்று போடுவது ஒரு சிறந்த தீர்வாக இருக்கலாம் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களுக்கு அருகம்புல்லை பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து அருந்தலாம். வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபட சிறந்த வழி எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் வாய் கொப்பளிக்க வேண்டும்.
மேலும் மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும். அத்திப்பழத்தை காலையில் சாப்பிட்டு வர இதயம் வலுப்பெறும். மேலும் கீழாநெல்லியின் வேரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி அடையும்.
இந்த இயற்கை வைத்தியம் வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.