டமாஸ்கஸ்: காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் அவர்களுக்கு ஆதரவான ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், சிரியா மீதான தாக்குதலை நீட்டித்துள்ளது. சிரியாவின் எல்லையில் பதுங்கியிருந்து அடிக்கடி இஸ்ரேல் எல்லையில் தாக்குதல் நடத்தி வரும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் குழுவை குறிவைத்து நேற்று இஸ்ரேல் சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
டமாஸ்கஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மீது இஸ்ரேல் இரண்டு ஏவுகணைகளை வீசியதாக சிரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் குழுவின் அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது, குத்சாயா, மாசியில் 2 கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இஸ்ரேல் ஏவுகணை தாக்கியதில் 5 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.