மதுரை: ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை மதுரையில் நடத்தலாமா என்று ஆலோசனை நடக்கிறது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டும் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள அரங்கத்தில், கபடி, டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து ஆடுகளங்களும், பல்வேறு வசதிகளும் செய்யப்பட உள்ளன என்றார்.
மேலும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை மதுரையில் நடத்தலாமா என ஆலோசனை நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.