சென்னை: பெரும்பாலான பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்த சந்தையில் கிடைக்கும் ரசாயனங்கள் கலந்த பொருள்களை பயன்படுத்துகின்றனர்.
அவை ஆரம்ப காலத்தில் நமது அழகை மேம்படுத்துவதாக தெரிந்தாலும் போக போக நமது சருமத்தை உலர செய்வது போன்ற பல சரும பிரச்னைகளை கொண்டு வரலாம். இயற்கை நமக்கு தந்துள்ள பொருளை நாமே நேரடியாக பயன்படுத்தும்போது நமது சருமம் மேலும் அழகாகவும் பொலிவாகவும் மாறும்.
குங்குமப்பூ என்றாலே அது நிறத்தை அதிகரிக்க செய்யும் ஒரு இயற்கை பொருள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். நிறமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் எல்லா வகை க்ரீம்களிலும் குங்குமப்பூவின் பங்கு உள்ளது.
கடையில் வாங்கும் கிரீம்களில் சிறிதளவு குங்கும பூவும் அதிக அளவு அது கெடாமல் காக்க கூடிய ரசாயனங்களும் கலக்கப்படுகிறது. இதற்கு பதிலாக நாமே குங்குமப்பூவை நேரடியாக வாங்கி பயன்படுத்தும் போது அதன் பலன்கள் இரட்டிப்பாக்கின்றன.
செய்முறை: குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மை நமது முகத்தில் படர்ந்திருக்கும் அழுக்கை நீக்குகிறது. இதனை பாலுடன் சேர்த்து கொதிக்க விடுங்கள். நான்கு அல்லது ஐந்து குங்குமப்பூக்கள் மற்றும் கால் டம்ளர் பால் இவற்றை கலந்து கொதிக்க விடுங்கள். பாலின் நிறம் மஞ்சளாக மாறும்போது இறக்கி வையுங்கள். ஆறியபின்னர் முகம் முழுவதும் தடவி 20 நிமிடங்கள் ஊற விடுங்கள். பின்னர் வெது வெதுப்பான நீரில் முகம் கழுவுங்கள். சருமத்தின் கருமை மறைந்து சீக்கிரமே முகம் பொலிவடையும்.