சென்னை: 16-வது மத்திய நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு இன்று தமிழகம் வருகிறது. கமிஷன் உறுப்பினர்கள் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சௌம்யா காந்தி கோஷ், கமிஷன் செயலர் ரித்விக் பாண்டே, இணைச் செயலர் ராகுல் ஜெயின் உள்ளிட்ட 12 பேர் சிறப்பு விமானம் மூலம் இன்று மதியம் சென்னை வருகின்றனர்.
முதலில் நங்கநல்லுார் சென்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரெங்கராஜனை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். இரவு 7.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்குச் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்திக்கின்றனர்.
அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, முதல்வர் வழங்கும் விருந்தில் பங்கேற்கின்றனர். நாளை காலை 9.30 மணிக்கு சோழா ஓட்டலில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டம் நடைபெறுகிறது. பின்னர், தொழில், வணிகம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர். மாலையில் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள்.
கடந்த 19-ம் தேதி நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கிருந்து பெரும்புதூர் சென்று ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்களை பார்வையிடுகின்றனர். மதியம் சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் செல்வார்கள். ராமேஸ்வரம் கோயிலில் இரவில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
20-ம் தேதி தனுஷ்கோடி, ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம், கீழடி அகழாய்வு மையம் ஆகியவற்றை பார்வையிடுகின்றனர். பின்னர் மதுரை வந்து மதியம் சிறப்பு விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.