ஐதராபாத்: ஹைதராபாத்தை மாசில்லா நகரமாக மாற்ற தெலுங்கானா அரசு புதிய மின்சார வாகனக் கொள்கையை அறிவித்துள்ளது. அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் அறிவித்துள்ளார்.
இரு சக்கர வாகனங்கள், கார்கள், வாடகை கார்கள், ஆட்டோக்கள், டிராக்டர்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து மின்சார வாகனங்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். தொழில் நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் பயன்படுத்தும் மின்சார பேருந்துகளுக்கும் இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த சலுகை 2026 டிசம்பர் 31 வரை 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, தெலுங்கானாவில் இந்த 2 ஆண்டுகளில் புதிய மின்சார வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தின் ஆயுட்காலம் முழுவதும் சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது.