சென்னை: சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி சாம்சங் துணை நிறுவனமான எஸ்எச் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 91 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பணிநீக்கத்தை ரத்து செய்யக் கோரியும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரியும் காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சட்டத்தில் அனுமதி இல்லை என நீதிபதி ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிற்சங்கம் சார்பில் வக்கீல் திருமூர்த்தி ஆஜராகி வாதிடுகையில், “உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளித்து தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அரசியல் சாசனம் ஜனநாயக போராட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் தவிர வேறு போராட்டம் நடத்த மனுதாரர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வரும் 30-ம் தேதி தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் தவிர மற்ற போராட்டம் நடத்தப்படும் என உத்தரவிட்டார்.