By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய அமெரிக்க கோர்ட்
    1 Min Read
    இந்தியாவை எதிர்த்த மூன்று நாடுகளின் கூட்டணி – ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் உள்ள சூழ்நிலை
    2 Min Read
    எலான் மஸ்க் டிரம்ப் நிர்வாகத்தை விட்டு வெளியேறினார்..!!
    1 Min Read
    மாணவர்களைப் பாதிக்கும் அமெரிக்க விசா கட்டுப்பாடுகள் ..!!
    2 Min Read
    வர்த்தக நீதிமன்றத்தின் தடை டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவு..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஆபரேஷன் சிந்தூரை நேரில் கண்ட சிறுவன்
    2 Min Read
    இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு தாக்குதல்
    2 Min Read
    RCB ரசிகர்கள் கொண்டாட்டம்: பெங்களூருவை தலைநகராக்க வேண்டும் என வலியுறுத்தல்
    1 Min Read
    ஐஆர்சிடிசி நிதிநிலை அறிக்கை: நிகர லாபத்தில் 26% வளர்ச்சி – ரயில் நீர், உணவுப் பிரிவிலும் வருவாய் உயர்வு
    2 Min Read
    இந்தியாவின் 10 பணக்கார மாநிலங்கள் – தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் சாதனை
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பல மருத்துவ குணங்களை கொண்ட செவ்வாழை பழம்!
    1 Min Read
    ஞாபகச்சக்தியை அதிகரிக்கச் செய்யும் அற்புத குணம் கொண்ட வல்லாரை
    2 Min Read
    இயற்கை மணம் நிறைந்த சந்தன எண்ணெயில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!
    1 Min Read
    சுவை மற்றும் மணம் நிறைந்த அன்னாசிப்பழத்தில் பல மருத்துவ குணங்கள்!!
    1 Min Read
    தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்த சீமான்.. அரசியல் வட்டாரத்தில் குழப்பம்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்த சீமான்.. அரசியல் வட்டாரத்தில் குழப்பம்..!!
அரசியல் செய்திகள்

நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்த சீமான்.. அரசியல் வட்டாரத்தில் குழப்பம்..!!

Periyasamy
Last updated: November 22, 2024 6:01 pm
By Periyasamy 2 Min Read
Share
SHARE

சென்னை: தமிழகத்தில் 2026-ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும், தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவர் கட்சி தொடங்கிய போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு ஆதரவு தெரிவித்து தம்பியின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஆனால் விஜய் நடத்திய முதல் மாநாட்டிலேயே சீமானை விமர்சித்தார். இதனால் கடுப்பான சீமான், முதலில் எதிர்த்தாலும், ஆதரிப்போம் என்று கூறிவிட்டு, மாநாடு முடிந்ததும், இனி அண்ணன் இல்லை, தம்பி இல்லை என்றும், ‘திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள்‘ என்று விஜய்யின் பேச்சுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

திடீரென ரஜினிகாந்தை சந்தித்த சீமான்.., என்ன காரணம்? - லங்காசிறி நியூஸ்

இதையடுத்து விஜய் ரசிகர்களும், நாம் தமிழர் கட்சியினரும் சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர் வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர். அதே சமயம் சீமானின் நாம் தமிழர் கட்சியின் பல்வேறு பகுதிகளில் பிரபலமான முகமாக இருந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறுவது சீமானுக்கு சற்று கவலையை அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி விஜய்யின் தமிழக வெற்றிக் கட்சியில் இணையப் போகிறார்கள் என்ற செய்தியும் சீமானுக்கு தலைவலியாக மாறியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தபோது, ​​அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்து சீமான் கடுமையாக விமர்சித்தார். தமிழக அரசியலில் தமிழரல்லாதவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என அவர் கூறிய கருத்து அப்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓரிரு முறை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். அதே சமயம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்ததும் சீமான் தனது விமர்சனத்தை நிறுத்தினார். குறிப்பாக 2022 டிசம்பரில், ரஜினிகாந்தை அரசியல் ரீதியாக விமர்சித்தபோது, ​​கடுமையான வார்த்தைகளால் யாரையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் என்று கூட கூறியிருந்தார்.

ரஜினிகாந்தின் அரசியலை கடுமையாக விமர்சித்து வந்த சீமான், அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறியவுடன் தனது நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிக் கொண்டார். இந்நிலையில் சீமான் தற்போது நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நேற்று இரவு 8 மணியளவில் இந்த ரகசிய சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

விஜய் தமிழக அரசியலுக்கு வருவதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், சீமான் எதிர்பாராத விதமாக ரஜினிகாந்தை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

You Might Also Like

யாருக்கு கொடுப்பது… நிர்வாகிகளுடன் 2ம் நாளாக எடப்பாடியார் ஆலோசனை

நகை கடன்களுக்கான கட்டுப்பாடுகள்… தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை

யாரை தேர்வு செய்ய வேண்டும்… தவெக தலைவர் விஜய் கூறியது என்ன?

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு விஜய் பரிசு..!!

பாமகவில் என்ன நடக்கிறது? இன்று நிர்வாகிகளைச் சந்திக்கிறார் அன்புமணி

TAGGED:politicalRajinikanthSeemanஅரசியல்நடிகர் விஜய்ரஜினிகாந்த்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

பல மருத்துவ குணங்களை கொண்ட செவ்வாழை பழம்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?