பாலக்காடு அருகே உள்ள கண்ணுக்கோடு பகவதி அம்மன் கோயிலில் இந்த ஆண்டு கார்த்திகை மாத ஆராட்டு உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இம்முறையும் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் நம்பிக்கையுடன் கூடியிருந்தனர். இந்த உற்சவம் கார்த்திகை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். நேற்று காலை மகா கணபதி ஹோமத்துடன் உற்சவம் தொடங்கியது.
காலை 5:30 மணிக்கு அபிஷேகம், பஞ்சகவ்யம், கலசாபிஷேகம் நடந்தது. காலை 10:30 மணிக்கு பஞ்சவாத்தியம் இசைக்கப்பட்டு ஐந்து யானைகள் ஊர்வலம் நடந்தது. காலை 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 5:00 மணிக்கு பஞ்ச வாத்தியம் முழங்க பகவதி அம்மன் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:15 மணிக்கு அம்மனுக்கு நிறைமாலை, சந்தனக்காப்பு பூஜைகள் நடந்தன.
அதன்பின், பக்தர்கள் கோயிலைச் சுற்றி தீபம் ஏற்றி வழிபட்டனர். மாலை 6:30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு, செங்கோட்டை மேளம் முழங்க, ஐந்து யானைகள் ஊர்வலத்துடன் அம்மன் வெளியே அழைத்து வரப்பட்டார். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.
கேரளாவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் இதுவும் ஒன்று.