சென்னை: “புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்த வேண்டும். இந்த சட்டங்களை அமல்படுத்தக்கூடாது. முழுமையாக வாபஸ் பெற வேண்டும்” என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய பிரிவுகளில் தற்போதுள்ள சட்டப்பிரிவுகளை மாற்றியமைத்து புதிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
காலாவதியான சமஸ்கிருத மொழியில் இவற்றைப் பெயரிட்டு, இந்தியா முழுவதும் ஒரே மொழித் தலைப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.
ஜூலை 1-ம் தேதி முதல் இந்த சட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து விவாதித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழு, “இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348-வது பிரிவுக்கு எதிரான நடவடிக்கை.
இதனை உடனடியாக நிறுத்தி வைத்து முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதை வலியுறுத்தி 01.07.2024 அன்று கறுப்பு தினமாக அனுசரித்து, நீதிமன்ற வாசல்களில் உண்ணாவிரதம், அன்றிலிருந்து ஒருவாரம் மாநிலம் முழுவதும் நீதிமன்றப் பணியில் இருந்து விலகி, ஜூலை 2-ம் தேதி நீதிமன்றங்கள் முன்பும், மத்திய அரசு முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
அலுவலகங்கள் ஜூலை 3-ம் தேதி, திருச்சியில் ஜூலை 8-ம் தேதி வழக்கறிஞர்கள் பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றிய மத்திய அரசு தன்னிச்சையாக இந்த சட்டங்களை நிறைவேற்றியது.
இந்தச் சட்டங்களை அமல்படுத்தக் கூடாது, முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரி வழக்கறிஞர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று வெற்றி பெற வாழ்த்துகிறது.