சியோல்: தென் கொரியாவின் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் 1993 முதல் 2010 வரை புவி இயற்பியல் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இதுகுறித்து ‘ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ இதழில் அவர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது:- நிலத்தடி நீர் குறைந்ததால், பூமியின் துருவம் கிழக்கு நோக்கி 80 செ.மீ. ஆராய்ச்சி காலத்தில், பூமியில் இருந்து 2,150 ஜிகாடன் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால், கடல் மட்டமும் 0.24 அங்குலங்கள் உயர்ந்து, பூமியின் நிறை பரவலை மாற்றி, அதன் சுழற்சி அச்சு ஆண்டுக்கு 4.36 செமீ சாய்கிறது. தற்போது 31.5 அங்குலம் சாய்ந்துள்ளது. நிலத்தடி நீர், மீண்டும் கடலுக்குள் பாய்ந்து, துருவ இயக்கத்தை பாதிக்கிறது.
பூமியின் அச்சில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் வானிலையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. இருப்பினும், நிலத்தடி நீரை தொடர்ந்து உறிஞ்சப்பட்டால், அது நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். பூமியின் துருவ இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, நிலையான நீர் மேலாண்மை நடவடிக்கைகள் தேவை, என்றார்.