தேவையான பொருட்கள்: எண்ணெய் – 2 டீஸ்பூன் வரமிளகாய் – 5 உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன் பொட்டுக்கடலை – 1/2 கப் முருங்கைக்கீரை – 2 கைப்பிடி எண்ணெய் – 1 டீஸ்பூன் தேங்காய் – 3 பெரிய சில்லு (பொடியாக நறுக்கியது) புளி – 1 சிறிய துண்டு உப்பு – சுவைக்கேற்ப தாளிப்பதற்கு… எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன் சரகம் – 1/4 டீஸ்பூன்
செய்முறை: * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். * பின் அதில் உளுத்தம் பருப்பு, பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். * பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், முருங்கைக்கீரையை சேர்த்து நன்கு சுருங்க வதக்க்கி இறக்க வேண்டும். * பிறகு மிக்சர் ஜாரில் தேங்காயை எடுத்து நீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். * பின் அதில் வறுத்த வரமிளகாய், பொட்டுக்கடலை, உளுத்தம் பருப்பு மற்றும் வதக்கிய முருங்கைக்கீரையை சேர்க்க வேண்டும். * அதன் பின் புளி மற்றும் சிறிது உப்பு மற்றும் நீர் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். * இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்தால், சுவையான முருங்கைக்கீரை சட்னி தயார்.