விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி வெளியான எப்ஐஆர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் தற்போது சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தில் ஆர்யா நாயகனாகவும், கவுதம் கார்த்திக் இரண்டாவது நாயகனாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு மிஸ்டர்.எக்ஸ். என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் துவங்கி தற்போது முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.