சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை:- டெல்டா பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கி, விவசாய மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு உடனடியாக சிறப்பு கவனம் செலுத்தி டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க ஆவண செய்ய வேண்டும்.
மேலும், தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை. டெல்டா பகுதி விவசாயத்தை நம்பி உள்ளதால் விவசாய மக்களுக்கு உடனடியாக நல்ல தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு பயிர் இழப்பீடு வழங்கி கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.